( எச்சரிக்கை:  இதயம் பலகீனமானவர்கள் இதைத் தவிர்க்கவும் )
https://www.facebook.com/cctvnewschina/videos/1283048148402669/
 
பொதுவாய், வனவிலங்குப்  பூங்காவில் பார்வையாளர்கள் ஒரு சபாரி வண்டியில் சுற்றிப்பார்ப்பது  தான்  பாதுகாப்பானது. பாதுகாப்பு விதிமுறைகள் நமது உயிரைப் காப்பதற்கே. விதிமுறைகளை மீறினால் பேராபத்தாய் முடியலாம்.
கடந்த சனிக்கிழமை பிற்பகல் பெய்ஜிங் பதாலிங் வனவிலங்கு பூங்காவில் ஒரு ஜோடி புலி ஒன்று காரை விட்டு கீழே இறங்கிய ஒருப் பெண்மணியின் மீது பாய்ந்து தாக்கியதில் ஒரு பெண் கொல்லப்பட்டார் மற்றும் அவரைக் காப்பாற்ற முயன்ற மற்றொருவர் காயமுற்றார்.
 
கண்காணிப்பு வீடியோவில் பதிவாகியுள்ள  காட்சியில், ஒரு பெண்ணை ஒரு புலி இழுத்து தாக்குவது பதிவாகியுள்ளது. அதில் அந்தத் பெண் கொல்லப்பட்டார்.
 
பார்வையாளர்களை தமது சொந்தக் காரில்  சுற்றிப்பார்க்க  அனுமதிக்கும் போது, அவர்கள் விலங்குகள் பூங்கா உள்ளே எங்கும் காரை விட்டு இறங்குவது கண்டிப்பாகத் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த சம்பவத்தில் இறந்த பெண், காரில் இருந்து இறங்கியதால் புலித் தாக்குதலுக்கு பலியானார் எனச்  செய்தி ஊடகங்கள் கருத்து தெரிவித்துள்ளன .
 
இதனால் தற்போதைக்கு , பூங்கா மூடப்பட்டுள்ளது. இது போன்றத் தாக்குதல் புதிதில்லை. கடந்த 2014 ஆம் ஆண்டில்  ஆகஸ்ட் மாதத்தில் அதே பூங்காவில் ஒரு பாதுகாப்பு அதிகாரி புலி தாக்குதலில் கொல்லப்பட்டார்.