அமெரிக்காவிலும் அப்படித்தான்: ஜனநாயக கட்சி ஹிலாரிக்கு குடியரசு கட்சி புளூம்பர்க் ஆதரவு?

Must read

நம்மூரில்தான் தேர்தல் நெருக்கத்தில் கட்சிப் பிரமுகர்கள், “திடீரென்று” மாற்றுக் கட்சி வேட்பாளருக்கு தங்களது ஆதரவை அளிப்பார்கள்.  அதே போல அமெரிக்காவில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குடியரசு கட்சியில் செல்வாக்கான பிரமுகர் மைக்கேல் புளூம்பர்க்.   கட்சியில் செல்வாக்குள்ள இவர், நியூயார்க் நகரத்தின் முன்னாள் மேயர்.
1
இவர் தனது கட்சி அதிபர் வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் பற்றி திடீரென புகார்களை அள்ளி வீசியிருக்கிறார். டிரம்ப், இனவாதத்தை வளர்ப்பதாகவும் பொருளாதாரம் குறித்து போதுமான சிந்தனை அவருக்கு இல்லை என்றும் புளூம்பர்க் தெரிவித்தார்.   இது  அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில் மாற்றுக்கட்சியான,  ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கு புளூம்பர்க் ஆதரவு தெரிவிப்பார் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

More articles

Latest article