கொச்சி:

சிறைக்கைதிகளைக் கொண்டு பொதுமக்களுக்கு தேவையான சமையல் பொருட்கள், குளிர் பானங்களை குறைந்த விலையில் சிறைத்துறை விற்பனை செய்து வருகிறது. இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை  பெற்றுள்ளது.

எர்ணாகுளம் சிறைத்துறை சார்பில் முதன்முறையாக இந்த விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு பொது மக்களிடம் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளதால், மற்ற மாவட்ட தலைநகரங்களிலும் இதுபோன்ற விற்பனை மையங்களை தொடங்க கேரள அரசு ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

தற்போது எர்ணாகுளம் சிறைத்துறை சார்பில், சிறைக்கைதிகளை கொண்டு, சமையல் பொருட்கள், கோடைக்கேற்ற குளிர் பானங்கள் மற்றும்அலங்கார துண்டுகள் ஆகியவற்றை  விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மக்களுக்கு விற்பனை செய்யும் இந்த அனைத்து பொருட்களும் சிறைக் கைதிகளை கொண்டு தயாரிக்கப்பட்டு, அவர்களைக்கொண்டே சிறைத்துறை வளாகத்தில் உள்ள விற்பனையகம் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. . இதற்கு ‘ஃப்ரீடம் ப்ராடக்ட்ஸ் மற்றும் ஃபுட் ஃபார் ஃப்ரீடம்’ என்ற பெயரிடப்பட்டுள்ளது.

இங்கு விற்பனை செய்யப்படும் பொருட்கள் அனைத்தும் சந்தை விலையைவிட குறைவாக இருப்பதால், பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.