டில்லியில் தொடரும் பனி மூட்டம்: 26 ரயில்கள் ரத்து; 32 ரயில் தாமதம்!

Must read

டில்லி,

டமாநிலங்களில் கடந்த சில மாதங்களாக கடும் பனி மூட்டம் நிலவி வருகிறது. இதன் காரணமாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்ட உள்ளது.

தலைநகர் டில்லியில் தொடர்ந்து கடும் பனி மூட்டம் நிலவி வருவதால், தினசரி ஏராளமான ரெயில் சேவைகள் மற்றும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

பனி மூட்டம், பனிப்பொழிவு காரணமாக சாலைகளிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிக அளவிலான விபத்துக்களும் ஏற்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தொடர்ந்து நிலவி வரும் கடும் பனிமூட்டம் காரணமாக டில்லியில்  32 ரெயில்கள் தாமதமாக வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் 26 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாகவும்,  1 ரெயிலின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல்வேறு விமான சேவைகளும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

More articles

Latest article