டில்லி
வீடுகளின் கூறைகளில் சோலார் தகடு பொருத்துவது கட்டாயம் ஆக்கப்பட உள்ளதாக டில்லி ஆளுநர் தெரிவித்துள்ளார்.
டில்லியில் நேற்று நடந்த ஒரு நிகழ்வில் கலந்துக் கொண்டு டில்லி ஆளுனர் அனில் பைஜால் உரையாற்றினார். டில்லி பிசினெஸ் கமிட்டியின் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் அவருடன் தொழில்துறை அமைச்சரும் மற்றும் பல பிரமுகர்களும் கலந்துக் கொண்டனர்.
ஆளுனர் தனது உரையில். “அனைத்து வீடுகளின் கூறைகளிலும் சோலார் தகடுகள் பொருத்துவது கட்டாயமாக்கப்பட உள்ளது. இதன் மூலம் இனி மின்சாரத் தடை ஏற்படாத நிலை உண்டாகும். டில்லி நகரை மிகவும் அச்சுறுத்துவதில் போக்குவரத்து நெரிசலும் ஒன்றாகும். ஒரு நாளக்கு 77 இடங்களில் போக்குவரத்து நெரிசல் உண்டகின்றன. இவைகளை மாற்ற திட்டங்கள் தீட்டப்பட உள்ளன. இன்னும் 16 மாதங்களில் போக்குவரத்து நெரிசல் குறையக் கூடும்” என தெரிவித்தார்.
தொழில்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், “விரைவில் நகரில் குடிசைகள் முழுவதுமாக அகற்றப்பட்டு அங்கு வசிப்போருக்கு இலவசமாக அடுக்கு மாடி குடியிருப்புக்கள் அமைத்து தர அரசு திட்டமிட்டுள்ளது. டில்லியில் நில ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது. அதை ஒடுக்க தேவையான திட்டங்கள் தீட்டப்பட உள்ளன” என தெரிவித்தார்.