போபால்:

மத்திய பிரதேசம் மாநிலம் மண்சவுர் மாவட்டத்தில் விவசாயிகள் இன்று போராட்டத்தில் டுபட்டனர். உற்பத்தி பொருளுக்கு சரியான விலை நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் விவசாயிகள் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த 5 விவசாயிகள் இறந்ததாக உறுதிபடுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

துப்பாக்கி சூட்டை தொடர்ந்து காவல்நிலையத்தை விவசாயிகள் சூறையாடினர். போராட்டத்தை அடக்க கூடுதல் போலீசாரை மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பு பணியில் குவித்துள்ளது. மேலும், வன்முறை குறித்த தகவல்கள் பரவுவதை தடுக்க சமூக வளைதளங்களை முடக்கவும் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

மத்தியபிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் கூறுகையில்,‘‘ விவசாயிகள் பிரச்னையை மாநில அரசு சுமூகமாக கையாண்டு வருகிறது. ஆனால் இதில் காங்கிரஸ் வன்முறையை தூண்டிவிடுகிறது’’ என்றார்.