வாட்ஸ் அப் குரூப்பில் ஆபாச கருத்து பதிவு !! 34 பைலட்கள் மீது போலீசில் புகார்

டெல்லி:

ஸ்பைஸ் ஜெட், ஜெட் ஏர்வேஸ், கோ ஏர், இண்டிகோ ஆகிய தனியார் விமான நிறுவனங்களை சேர்ந்த 34 பைலட்கள் மீது விமான போக்குவரத்து துறை இயக்குனரகம் சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

இந்த பைலட்கள் இணைந்து வாட்ஸ் அப் குரூப்பை ஏற்படுத்தியுள்ளனர். அதில் விமான போக்குவரத்து இயக்குனரக அதிகாரிகள் குறித்து ஆபாச கருத்துக்கள் தெரிவித்திருந்ததாக புகார் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து இயக்குனரக தலைவர் புல்லார் கூறுகையில், ‘‘விமான போக்குவரத்து துறை இயக்குனரக அதிகாரிகள் குறித்த ஆபாச கருத்துக்களை சமூக வளைதளங்களில் பகிர்ந்துள்ளனர். இதற்காக நடவடிக்கை எடுக்க போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.

பைலட்கள் அடங்கிய ஒரு வாட்ஸ் அப் குரூப்பில் சில பைலட்கள் இத்தகைய கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

‘‘ அதிகாரிகளின் குடும்ப உறுப்பினர்கள் குறித்து ஆபாசமாகவும், ஏற்கமுடியாத மற்றும் மன்னிக்கமுடியாத வகையிலும் கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த கருத்துக்கள் சமூக வளைதளங்களில் பகிரப்பட்டுள்ளது.

இத்தகைய கருத்துக்கள் அடங்கிய ஸ்க்ரீன் ஷாட் காப்பி போலீசாரிடம் வழங்கப்பட்டுள்ளது. அந்த குரூப்பில் இடம்பெற்றுள்ள 34 பைலட்கள் மீதும் புகார் அளிக்கப்பட்டுள்ளது’’ என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


English Summary
Obscene remarks’ against DGCA officials on Whatsapp land 34 pilots in trouble