பி

னித முகத்துடன் உ பி மாநிலத்தின் ஒரு கன்றுக்குட்டி பிறந்து, உடனே இறந்து விட்டது.  அங்குள்ள மக்கள் அதை மகாவிஷ்ணுவின் அவதாரம் என சொல்லி கோயில் கட்ட முடிவு செய்துள்ளனர்

உத்திர பிரதேசத்தில் பச்சேந்திரா என்னும் கிராமத்தில் ஒரு பசு கன்றுக்குட்டியை ஈன்றெடுத்தது.  அந்தக் கன்றுக்குட்டியின் முகத்தில் கண்கள், வாய் மற்றும் காதுகள் மனிதனின் முகத்தில் உள்ளது போல் இருந்தது.  பிறந்த மிக சிறிது நேரத்துக்குள் அந்த கன்றுக்குட்டி இறந்து விட்டது

அந்தக் கன்றுக்குட்டியைப் பார்த்த மக்கள் அதனை மகாவிஷ்ணுவின் அவதாரம் என்றும், அதனால் தான் மனித முகத்துடன் பிறந்ததாகவும் கூறினார்கள்.  புனிதமான பசுவின் வயிற்றில் பிறந்த மனித உருவக் கண்றுக் குட்டி என செய்தி பரவ அதைக் காண மக்கள் அனைவரும் விரைந்தனர்.

இறந்த கன்றுக்குட்டியின் சடலம் மாலை இடப்பட்டு கண்ணாடிப் பேழையில் காட்சிக்கு வைக்கப் பட்டது..   புனிதமான பசுவின் மைந்தன் நிச்சயம் மகாவிஷ்ணுவின் அவதாரமே, எனவும் அந்தக் கன்றுக் குட்டிக்கு கோயில் எழுப்ப திட்டமும் தீட்டப்பட்டது.   கோயிலுக்காக மக்களிடமிருந்து காணிக்கைகள் வசூலும் நடந்துக் கொண்டிருக்கிறது

இதற்கிடையில் விலங்கியல் ஆர்வலர் அஜய் தேஷ்முக்  பத்திரிகையாளர்களிடம் இது மகாவிஷ்ணுவின் அவதாரம் இல்லை என்றும், பசுவின் கர்ப்பத்தில் ஏற்பட்ட சில கோளாறு காரணமாக முகத்தின் வளர்ச்சியின் போது சில பாகங்கள் சரியாக வளராததால் இது போல தோற்றமளிக்கிறது என தெரிவித்தார்.

மொத்தத்தில், எது நடந்தாலும் கல்லா கட்டும் நபர்கள் எங்கும் நிறைந்துள்ளனர் என்பது தெளிவாகத் தெரிகிறது