சென்னை:
மீன்பிடி தடைக்காலம் தொடங்க உள்ள நிலையில், மீனவர்களுக்கு மீன்வளத்துறை அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.

மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் மாதம் 14-ந் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த காலத்தில் விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படும்.

இந்நிலையில், மீன்பிடி தடைக்காலம் தொடங்க உள்ள நிலையில், மீனவர்களுக்கு மீன்வளத்துறை அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.

மீன்பிடி தடைக்காலம் தொடங்கவுள்ளதையொட்டி மீன்வளத்துறை வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில், அனைத்து விசைப்படகுகளும் வரும் 14ம் தேதி இரவுக்குள் கரை திரும்பிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.