சென்னை:
க்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்க AICTE உத்தரவு பிறப்பித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா கடுமையான தாக்குதல் நடத்தி வரும் நிலையில், மத்திய அரசின் ஆபரேசன் கங்கா திட்டத்தின் மூலம்,உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்கள் அண்டை நாடுகள் வழியாக மீட்கப்பட்டு தாயகம் அழைத்து வரப்படுகின்றனர்.அந்த வகையில்,இதுவரை 17,400 பேர் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

எனினும்,உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.அந்த வகையில்,வெளிநாடு வாழ் தமிழர் நல ஆணையத்திற்கு ரூ 3.5 கோடி ஒதுக்கீடு செய்து ஏற்கனவே தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து,உக்ரைனிலிருந்து நாடு திரும்பியுள்ள மருத்துவ மாணவர்கள், இந்தியாவிலேயே தங்களது படிப்பை தொடர அனுமதிக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்,  பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில், பொறியியல், தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கு AICTE வெளியிட்டுள்ள உத்தரவில், உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும், காலியிடங்களின் எண்ணிக்கைக்கேற்ப படிப்பைத் தொடர அனுமதிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.