மதுரை:

மிழகத்தில் தண்ணீர் பஞ்சம் அதிகரித்து வரும் நிலையில், மதுரை மாநகராட்சி சார்பில் லாரிகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் லாரிகள் சரியான முறையில் தண்ணீரை மக்களுக்கு வழங்குகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில்   மாநகராட்சி குடிநீர் லாரிகளில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு உள்ளது.

நாட்டிலேயே முதன்முறையாக தண்ணீர் விநியோக முறைகேட்டை தடுக்க மதுரை மாநகராட்சி இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.

மதுரை நகர மக்களின் குடிநீர் தேவையை வைகை அணையில் இருந்து வரம் தண்ணீர் தீர்த்து வைக்கிறது.  மதுரை அரசரடி பகுதிய்ல் உள்ள அரசு  நீரேற்று நிலையத்தில் இருந்து, மதுரை மாநகராட்சி பகுதியில் தண்ணீர் தேவையான பகுதிகளுக்கு  36 லாரிகள் மற்றும் 25 டிராக்டர்கள் மூலம்  தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

இருந்தாலும் பல இடங்களில் பொதுமக்களுக்கு தண்ணீர் வரவில்லை என்று புகார்கள் எழுந்தன. இந்த நிலையில், மதுரை நகரில் தண்ணீர் வினியோகத்தை முறைப்படுத்த குடிநீர் கொண்டு செல்லும் லாரிகள் மற்றும் டிராக்டர்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டு கணினி மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மதுரையில் முதன் முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வர வேற்பை பெற்றுள்ளது. இதனால் அனைத்து பகுதிகளிலும் குறையின்றி தண்ணீர் விநியோகம் நடைபெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக மதுரை  மாநகராட்சி கமி‌ஷனர் விசாகன் தெரிவித்துள்ளார்.