சென்னை,

மீபத்தில் விண்ணில் ஏவப்பட்ட கார்டோசாட்-2  செயற்கோள் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளது இஸ்ரோ.

கடந்த ஜூன் 23-ம் தேதி சதீஷ்தவான் விண்வெளி நிலையத்தில் இருந்து  விண்ணில் ஏவப்பட்ட கார்டோசாட் 2 செயற்கைக்கோள் வெற்றிகரமாக தனது பணியை செய்து வருகிறது.

இந்த செயற்கை கோள் பூமியின் சில பகுதிகளை புகைப்படும் எடுத்து அனுப்பி வருகிறது. இதில் ஒரு படத்தை வெளியிட்டுள்ளது இஸ்ரோ நிறுவனம்.

ஆந்திர மாநிலம் இஸ்ரோவின் சதீஷ் தவான்  ஆராய்ச்சி மையத்திலிருந்து கார்டோசாட்-2 உள்ளிட்ட 31 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன.

இந்த கார்டோசாட்-2 செயற்கைக்கோள், பூமியைப் படம்பிடிக்கும் வகையைச் சேர்ந்தது. குறிப்பாக, எல்லைப் பகுதியிலுள்ள ராணுவ வீரர்களின் நிலைகளைப் படம் எடுப்பதற்கு இஸ்ரோ திட்டமிட்டிருந்தது.

இந்த செயற்கைக்கோளின்மூலம் பூமியின் பல்வேறு பகுதிகளைத் தெளிவாகப் படம் எடுக்க முடியும். தற்போது, கார்டோசாட் -2, பூமியின் சில பகுதிகளைப் படம் எடுத்து அனுப்பியுள்ளது.

ராஜஸ்தான், எகிப்து, கத்தார் ஆகிய பகுதிகளைப் படம் எடுத்து அனுப்பியுள்ளது.

தற்போது அந்தப் புகைப்படங்களை, இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.