சென்னை:

மிழகத்தில் ஊரகப்பகுதிகளில் முதல்கட்ட உள்ளாட்சி  தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. மக்கள் விறுவிறுப்பாக தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2 கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டது.  மொத்தம்91 ஆயிரத்து 975 உள்ளாட்சி பதவிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் மொத்தம் 2 லட்சத்து 31 ஆயிரத்து 890 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.அதன்படி இன்று  (27-12-2019) முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இன்று முதற்கட்டமாக, 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதற்காக 24 ஆயிரத்து 680 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தலில் சுமார் ஒரு கோடியே 30 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர்.

வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது. மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. மக்கள் நீண்ட வரிசையில் வந்து எதங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

இந்த தேர்தலில் 4 பதவியிடங்களுக்கு 4 வகையான வண்ணங்களில்  வாக்குச் சீட்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

கிராம ஊராட்சி வார்டு உறுப்பினரை தேர்வு செய்ய வெள்ளை நிற வாக்குச்சீட்டுகள்,கிராம ஊராட்சி தலைவரை தேர்வு செய்ய இளஞ்சிவப்பு நிற வாக்குச்சீட்டுகள், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினரை தேர்வு செய்ய மஞ்சள் நிற வாக்குச்சீட்டுகள், ஒன்றிய கவுன்சிலரை தேர்வு செய்ய பச்சை நிற வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படுகிறது.