சென்னை:

ழம்பெரும் நடிகையும், பரதநாட்டிய கலைஞருமான வைஜெயந்தி மாலா,  தனது 83 வயதில்,  பரதநாட்டியம் ஆடி அசத்தி உள்ளார். அவரது அபிநயம் மிக்க நாட்டியம் ஆடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னையை சேர்ந்தவரான வைஜெயந்திமாலா சிறுவயதிலேயே பரதநாட்டியம் பயின்றவர். தனது 13 வயதிலேயே பரத நாட்டியம் அரங்கேற்றம் செய்தவர். ஏராளமான நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.

இடையில், சினிமாவில் நுழைந்தவர்  வஞ்சிக்கோட்டை வாலிபன் உள்பட சில படங்களில் நடித்து புகழ்பெற்றார். பின்னர், அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் இணைந்து, 1984ம் ஆண்டு  தென் சென்னை மக்களவைத் தொகுதி போட்டியிட்டார். பின்னர் 1989ம் ஆண்டு தன்னை போட்டியிட்ட  ஆலடி அருணாவை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து, மக்களவையில் கால் பதித்தார். பின்னர், 1993 ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்தார்.

இடையில் சில காலம் அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தவர், நாட்டிய நிகழ்ச்சிகளை தொடர்ந்து  நடத்தி வருகிறார். தற்போது வைஜெயந்திமாலாவுக்கு  83 வயதாகிறது. இந்த தள்ளாத வயதிலும் அவர், அழகாகவும், நளினமாகவும் பரதநாட்டியம் ஆடி அசத்தினார்.

தொண்டு நிறுவனம் ஒன்றுக்காக சென்னையில் அவர் நடத்திய பரதநாட்டிய நிகழ்ச்சி  பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிகழ்ச்சியில் வைஜெயந்தி மாலா ஆடிய  பரதமும், அவரது அபிநயமும் பார்ப்போரை மெய் சிலிர்க்க வைத்து…  கலைக்கு வயது கிடையாது என்பதை வைஜெயந்திமாலா நிரூபித்து காட்டியுள்ளது கற்பனை செய்ய முடியாதது…

அவர் ஆடும் நாட்டியம் தொடர்பான வீடியோ சமுக வலைதளங்களில்  வைரலாகி வருகிறது… பத்திரிகைடாட் காம் வாசகர்களும் அவரது நடனத்தை கண்டு தங்களது மேலான  கருத்துக்களை தெரிவியுங்கள்…

வைஜெயந்தி மாலாவின் பரதம் – வீடியோ…