சென்னை நகரத்தை மையமாகக் கொண்டு நகைச்சுவைப் படத்தை இயக்குகிறார் தங்கர் பச்சான், அப்படத்திற்கு ‘டக்கு முக்கு டிக்கு தாளம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்தின் மூலம் தனது மகன் விஜித் பச்சானைக் கதாநாயகனாக அறிமுகப்படுத்துகிறார்.

விஜித் பச்சான் நாயகனாக நடிக்க, மிலனா நாகராஜ், அஸ்வினி இருவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள். மன்சூர் அலிகான், ஸ்டண்ட் சில்வா, யோகிராம் மூவரும் வில்லன்களாக நடிக்கிறார்கள். இப்படம் வெளியாகும் தேதி விரைவில் அறிவிக்க இருக்கிறார்கள்.

இந்நிலையில் படத்தின் பெயர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.