விஜய்யின் ‘பிகில்’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில், படக்குழு சார்பாக ஃபுட்பால் டோனமெண்ட் நடைபெறவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.ர்

இப்படத்தின் விளம்பர யுக்தியாக சென்னை சிட்டி ஃபுட்பால் டீமுடன் இணைந்து Football Knock Out Tournament நடத்த படக்குழு முடிவெடுத்துள்ளது. அதற்கான அறிவிப்பினை ஏஜிஎஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

இந்த போட்டியில் 64 அணிகள் பங்கேற்கலாம். இந்த போட்டி வரும் அக்.19 மற்றும் அக்.20ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வேளச்சேரியில் உள்ள டிக்கி டாக்கா மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான முன்பதிவு இன்று(அக்.9) முதல் முன்பதிவு செய்யலாம் . முன்பதிவு செய்யும் இணையதள பக்கத்தின் முகவரியும் அந்த ட்வீட்டில் பகிரப்பட்டுள்ளது.