லண்டன்: தான் அளித்த பரிசை, தானே நினைவுகூர முடியாமல் தடுமாறிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை, சங்கடத்திலிருந்து காப்பாற்றினார் அவரின் மனைவி மெலனியா.

அமெரிக்க அதிபர் தற்போது அரசுமுறை பயணமாக இங்கிலாந்து நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கே, பக்கிங்ஹாம் அரண்மனையில் அமெரிக்க கைவினைப் பொருள் கண்காட்சி நடைபெற்றது.

அப்போது, கடந்த ஓராண்டிற்குள், வின்ட்ஸர் பயணம் மேற்கொண்டிருந்த டிரம்ப், காரீயம் – வெள்ளி கலவையினால் பூச்சு செய்யப்பட்ட ஒரு பளபளப்பான குதிரையை ராணிக்கு பரிசாக அளித்திருந்தார். அந்தக் குதிரையை காட்டிய எலிசபெத், “இந்த சிலை உங்களுக்கு நினைவிருக்கிறதா?” என டிரம்பிடம் கேட்க, அவர், “இல்லை” என்று சொல்லிவிட்டார்.

உடனே, டிரம்பின் உதவிக்கு வந்த அவரது மனைவி மெலனியா, “நாம் இதை ராணிக்கு கொடுத்தோம் என நினைக்கிறேன்” என்று கூறி சூழலை சமாளித்தார்.

கடந்த ஒரு ஆண்டிற்குள்ளாக தான் பரிசளித்த பொருளையே மறந்துவிட்ட அதிபர் சங்கடப்படாமல் அவரின் மனைவியும், அமெரிக்காவின் முதல் பெண்மணியுமான மெலனியா காப்பாற்றியது தற்போது பரபரப்பான செய்தியாகியுள்ளது.