சென்னை: குடிசைப்பகுதியில் பயங்கர தீ! 50 வீடுகள் எரிந்து நாசம்!

Must read

 சென்னை:
பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில் உள்ள  குடிசைப்பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தால் 50க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து சாம்பலாயின..
1-besant nagar
பெசன்ட் நகர்  கடற்கரையை ஒட்டி அன்னை வேளாங்கன்னி கோயில் உள்ளது. அதை ஒட்டிய ஒட்டக்குப்பம் பகுதிகளில் மீன்பிடி தொழிலாளர்கள்  குடிசைகள் கட்டி தங்கி உள்ளனர். சுமார் 300க்கும் மேற்பட்ட குடிசைகள் அங்குள்ளது.
நேற்று இரவு திடீரென தீ பிடித்தது. காற்றும் பலமாக வீசியதால் தீ மளமளவென அருகிலுள்ள வீடுகளுக்கும் பரவியதது. இதில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சாம்பலாயின. அங்கு வசித்த மக்கள் அய்யோ அம்மா என்று அலறியடித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடிவந்தனர்.
தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் 8  தீணைப்பு  வாகனங்களில் வந்து  போராடி தீயை அணைத்தனர். .  சேத விவரம் இன்னும் முழுமையாக தெரியவில்லை. தீ பிடித்ததற்கான காரணத்தை  போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

More articles

Latest article