சென்னை:

பிரபல தொழிலதிபரும், மணல் மாபியாவுமான  சேகர் ரெட்டிக்குச் சொந்தமான கட்டிடம் சென்னையில் உள்ளது. இந்த கட்டிடத்தில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இரு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவர்மீது உள்ள பல வழங்குகளில் சிக்கிய ஆவணங்கள் எரிக்கப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

சேகர்ரெட்டிக்கு சொந்த இடங்களில் கடந்த 2016 ஆம் வருடம் டிசம்பர் மாதம் 8ஆம் தேதி  வருமானவரித்துறை அதிரடி சோதனை நடத்தியது. அப்போது,  சுமார்  ரூ. 33 கோடி அளவிலான புதிய ரூ.2ஆயிரம் நோட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும்,  கிலோ கணக்கில் தங்கம் கைப்பற்றப்பட்டதாகத் தகவல் வெளியானது.  இந்த சோதனையின்போது, திநகரில் உள்ள சேகர்ரெட்டிக்கு சொந்தமா 4 மாடி கட்டிடமும் அடங்கும்

இந்த ரெய்டு தொடர்பாக அவர்மீது 3 வழக்குகள் பதியப்பட்டன. இதில் 2 வழக்குகள் முடிவடைந்த நிலையில், ஒரு வழக்கு மட்டும் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், இன்று காலை சென்னை தி.நகர் விஜயராகவா சாலையில் உள்ள சேகர்ரெட்டிக்கு சொந்தமான .  ஜெஎஸ்ஆர் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் என்கிற நிறுவனத்தின் 4வது தளத்தில் இருந்து புகை வருவது தெரிய வந்தது. இதுகுறித்து,  அந்த நிறுவனத்தின் காவலாளிகள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர்,  கிரேன் உதவியுடன் தீயை அணைத்தனர்.

இந்த விபத்து  குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் அறிவித்துள்ள நிலையில், அங்கிருந்த அறையில் உள்ள ஏராளமான பொருட்கள் எரிந்துபோய் உள்ளதாக கூறி உள்ளனார். இதனால், வேரது வழக்கு தொடர்பான  முக்கிய ஆவணங்கள் எரிக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுப்பட்டு உள்ளது.

சேகர் ரெட்டி அலுவலகத்தில் ஏற்பட்ட இந்தத் திடீர் தீ விபத்தை சி.பி.ஐ அதிகாரிகளும் விசாரிக்கத் தொடங்கி உள்ளதாகவும், விசாரணைக்கு பிறகே தீ விபத்து ஏற்பட்டது எப்படி என்பது குறித்தும், அங்கு எரிக்கப்பட்ட ஆவணங்கள் என்ன என்பது குறித்து தெரிய வரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.