தேனி: தேனியில் 2 நிதி நிறுவனங்கள் திடீரென மூடப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

உத்தமபாளையத்தில் உதயநிலா என்ற பெயரில் நிதி நிறுவனம் ஒன்றை அஜீஸ்கான் உள்ளிட்டோர் கூட்டாக நடத்தி வந்தனர். 32 ஆண்டுகளுக்கும் மேலாக நிறுவனம் இயங்கிதால், கம்பம் உள்ளிட்ட சுற்றுவட்டார மக்கள்  அதிகம் முதலீடு செய்தனர்.

இந் நிலையில், அஜீஸ்கான் இறந்து விட்டதால், நிதி நிறுவனம் திடீரென மூடப்பட்டது. ஆகையால் முதலீட்டாளர்களால் பணத்தை திரும்ப பெற முடிய வில்லை. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் சேர்ந்து ரூ.100 கோடிக்கும் மேல் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது.

முதலீட்டு பணத்தை தருமாறு மற்றொரு பங்குதாரரான ஜமால் என்பவரிடம் பொதுமக்கள் முறையிட, அவர் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியதாக தெரிகிறது. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் நிதி நிறுவனம் தொடர்பாக ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.