சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு 6ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, வாக்களிக்க தகுதியான வாக்காளர்கள் குறித்து வயது வாரியாக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இதில்,   30 முதல் 39 வயது வரையிலான வாக்காளர்கள் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது.

தமிழகத்தில் இன்னும் மூன்று நாட்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், அனைத்துக் கட்சியினரும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் தேர்தல் ஆணையம் ஒருபுறம், வருமான வரித்துறை மற்றொருபுறம் என அதிரடி ரெய்டுகளும் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், ஏற்கனவே வாக்காளர் பட்டியலை வெளியிட்டிருந்த தேர்தல் ஆணையம்இ  தற்போது, தமிழகத்தில் வாக்களிக்க உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையை வயது வாரியாக வெளியிட்டுள்ளது. அதன்படி,

தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 28 லட்சத்து 69 ஆயிரத்து 955 வாக்காளர்கள் உள்ளனர்.

 18–19 வயதுடையோர் 13 லட்சத்து 83 ஆயிரத்து 610 வாக்காளர்கள்

20–29 வயதுடைய வாக்காளர்கள் 1 கோடியே 24 லட்சத்து 81 ஆயிரத்து 094 பேர்

30–39 வயதுடைய வாக்காளர்களில் 1 கோடியே 38 லட்சத்து 81 ஆயிரத்து 486 பேர்

40–49 வயதுடைய வாக்காளர்களில் 1 கோடியே 32 லட்சத்து 60 ஆயிரத்து 336 பேர்

50–59 வயதுடைய வாக்காளர்களில் 1 கோடியே 3 லட்சத்து 28 ஆயிரத்து 446 பேர்

60–69 வயதுடைய வாக்காளர்களில் 67 லட்சத்து 21 ஆயிரத்து 432 பேர்

70–79 வயதுடையோரில் 35 லட்சத்து 26 ஆயிரத்து 97 பேர்

80 வயதுக்கு மேற்பட்டோர் 12 லட்சத்து 87 ஆயிரத்து 457 பேர்.

மொத்தம் 6 கோடியே 28 லட்சத்து 69 ஆயிரத்து 955 வாக்காளர்கள் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.