சென்னை,

மிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் வரும் பிப்ரவரி 5-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்தல் நியாயமாக நடைபெற ஓய்வுபெற்ற நீதிபதியை நியமித்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு 2 வருடத்துக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுவது வழக்கமானது. கடந்த தேர்தல் 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்தது.

இதில் சங்கத்தின் தலைவராக கலைப்புலி எஸ்.தாணு, செயலாளர்களாக டி.சிவா, ராதாகிருஷ் ணன், துணை தலைவர்களாக கதிரேசன், தேனப்பன், பொருளாளராக டி.ஜி.தியாகராஜன் தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பில் இருந்து வருகின்றனர்.

ஆண்டுகள் முடிவடைந்ததையடுத்து, மீண்டும் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி பிப்ரவரி 5ந்தேதி தேதி தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை நடத்துவது என்று செயற்குழு கூடி முடிவு செய்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் தேர்தல்  நடத்தக்கோரி, தயாரிப் பாளர் முருகராஜ் சென்னை ஐகோர்ட்டில் ஏற்கனவே வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணையை அடுத்து,

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி கே.பி.சிவசுப்பிரமணி யத்தை நியமனம் செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் 1201 உறுப்பினர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.