பா.ஜ.க.வின் தவறான நடவடிக்கைகளை எதிர்த்து போராடுங்கள்; சித்தராமையாவுக்கு ராகுல் ஆலோசனை

டில்லி:

பெங்களூருவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் தங்கியுள்ள ரிசார்ட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது.

இதையடுத்து காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல், கர்நாடக முதல்வர் சித்தராமையாவுடன் தொலைபேசியில் பேசினார்.

பத்து நிமிடங்கள் நடந்த இந்த உரையாடலின்போது, பெங்களூருவின் நிலை குறித்து ராகுல் கேட்டறிந்தார்.

இறுதியியில், “பா.ஜ.க.வின் தவறான நடவடிக்கைகளுக்கு எதிராக உறுதியுடன் நின்று போராடுங்கள்” என்று ஆலோசனை தெரிவித்தார்.
English Summary
Fight against the BJP's wrong activities; Rahul's advice to Karnataka CM Siddaramayya