சென்னை: சென்னையில் உள்ள அரசு பள்ளி ஒன்றுக்கு சென்ற  திமுக சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா, நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் போராட வேண்டும் என்று வலியுறுத்தும் காணொலியில் வைரலாகி வருகிறது. இது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. மாணவர்களிடையே வன்முறையை தூண்டும் வகையில் பேசிய திமுக எம்எல்ஏ கைது செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

திமுக அரசு பதவி ஏற்றதும் முதல் கையெழுத்து நீட் விலக்கு என கூறி ஆட்சிக்கு வந்த நிலையில், பதவிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் கடந்தும், இதுவரை நீட் விலக்கு பெற முடியவில்லை.  2024ல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மீண்டும் நீட் விலக்கை கையில் எடுத்துள்ள திமுக, தற்போது நீட் விலக்கு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

2024ம் ஆண்டு, இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு மே மாதம் நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து, பள்ளி மாணவ மாணவிகள்,  2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நீட் தேர்வை எதிர்கொள்ள படித்து வரும் நிலையில், அவர்களிடம் நீட் விலக்கு கேட்டு போராடுங்கள் என திமுக எம்எல்ஏ பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது நீட் தேர்வில் விலக்கு பெறும் நோக்கில் ஐம்பது நாட்களில், ஐம்பது லட்சம் கையெழுத்து பெறுவதற்கான ஓர் இயக்கத்தைத் துவங்கியிருக்கிறது தி.மு.க. இது லோக்சபா தேர்தலுக்கான நாடகம் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.  நீட் தேர்வு தொடர்பாக மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டால் அதனையும் தங்கள் அரசியலுக்கு திமுக பயன்படுத்தி வருவதாக பாஜக உள்ளிட்ட கட்சியினர் குற்றம் சாட்டு உள்ளனர்.

பிரபாகர் ராஜா (A.M.V. Prabhakar Raja) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2021ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவர் தனது விருகம்பாக்கம் தொகுதியில் உள்ள  அரசு பள்ளி ஒன்றுக்கு சென்று அங்கு படித்து மாணவ மாணவிகளிடம்,  ம் நீட் பற்றிய பொய் பிரசாரம் செய்யும் காணொலி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திஉ ள்ளது. பள்ளிக்குள் சென்று, மாணவர்கள் நீட்டுக்கு எதிராக போராட வேண்டும் என்றும் வலியுறுத்தி மாணவர்களிடம் கட்டாய கையெழுத்து பெறுகிறார்

இது மாணவர்களை நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்க வைத்து திமுக அரசியல் செய்வதாக உள்ளதாகவும், இது பள்ளிக்கூடமா அல்லது அரசியல் மேடையா எனவும் பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

பள்ளி மாணவர்களின் மனதில் நஞ்சை விதைத்து திமுக அரசியல் செய்வதாக உள்ளது என பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

திமுக சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா, திமுக ஆதரவு வணிகர்கள் சங்க பேரமைப்பு தலைவர், விக்கிரம ராஜாவின் மகன் என்பத குறிப்பிடத்தக்கது.