சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் நிறுவனம் சார்பில் சிறப்பு வகை இனிப்புகள் விற்பனை செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, சென்னை , திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் சிறப்பு இனிப்பு வகைகள் விற்பனை செய்யப்பட உள்ளன.

மேலும், தீபாவளியை முன்னிட்டு,  ஆவின் நிறுவனம் சூப்பர் சேவர் காம்போ என்ற தள்ளுபடி விலையில் இனிப்புகளை விற்பனை செய்ய உள்ளது.

இதுகுறித்து, காஞ்சி -திருவள்ளூர் மாவட்டக் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் காக்களூர் பால் பண்ணையின் பொதுமேலாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஆவின் நிறுவனம் சார்பில், திருவள்ளூர், காஞ்சி, செங்கை மாவட்டங்களில் நெய் மைசூர்பா, நெய் லட்டு, காஜு கட்லி, பாதாம் அல்வா, கோவா, மில்க் கேக் ஆகிய சிறப்பு இனிப்பு வகைகள் விற்பனை செய்யப்பட உள்ளன.

சுத்தமான ஆவின் நெய்யால் தயாரிக்கப்பட்டு குறைந்த விலையில் நுகர்வோருக்கு வழங்கப்பட உள்ள இந்த இனிப்பு வகைகள் தரத்தில் உயர்ந்தவை ஆகும். இந்த இனிப்பு வகைகள், திருவள்ளூர் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் உள்ள ஆவின் பாலகம், மொத்த விற்பனை நிலையங்கள் மற்றும் சில்லறை விற்பனை முகவர்கள் மூலம் கிடைக்கும். மேலும், மொத்த ஆர்டர்களுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்கப்பட உள்ளது.

ஆகவே, மொத்த ஆர்டர்களுக்கு திருவள்ளூர் – 9894263351, காஞ்சிபுரம் – 9488731298, செங்கல்பட்டு – 9445695275 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தீபாவளிப் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், ஆவின் நிறுவனம் சூப்பர் சேவர் காம்போ என்ற தள்ளுபடி விலையில் இனிப்புகளை விற்பனை செய்ய உள்ளது. இதில், 250கிராம் மைசூர்பாகு, 200கிராம் மிக்சர், பிஸ்கட் மற்றும் சாக்லேட் அடங்கிய காம்போ 325 ரூபாய்க்கு பதிலாக 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.அ இதேபோன்று, பாதுஷா, பாதாம் மிக்ஸ், குலாப் ஜாமூன் மற்றும் சாக்லேட் அடங்கிய காம்போ, 525 ரூபாயிலிருந்து, 500 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. தலா 250 கிராம் அடங்கிய காஜு பிஸ்தா ரோல், காஜுகட்லி, பாதுஷா, நட்ஸ் அல்வா அடங்கிய காம்போ, 965 ரூபாயில் இருந்து, 900 ரூபாயாக குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.