சென்னை:
மிழகத்திற்கு ஜூன் மாதத்திற்கு 42 லட்சம் கொரோனா தடுப்பூசி தேவை என்ற நிலையில், இதுவரை ஐந்தரை லட்சம் மட்டுமே வந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

நாமக்கல்லில் ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேலும் 36 லட்சம் தடுப்பூசிகள் மத்திய அரசிடமிருந்து கிடைத்தவுடன் மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்படும் என்றார்.

தமிழ்நாட்டிற்குத் கொரோனா தடுப்பூசிகளை வழங்க, உலகளாவிய ஒப்பந்தத்தை யாரும் எடுக்க முன்வராததால் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து, முதலமைச்சர் முடிவெடுப்பார் என அமைச்சர் பதிலளித்தார்.

குன்னூரில் உள்ள தடுப்பூசி தயாரிக்கும் மத்திய அரசு நிறுவனம், மாதம் ஒரு கோடி தடுப்பூசிகள் தயாரிக்க முடியும் என்ற நிலையில் தயாராக உள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் கூறினார்.