டில்லி

போலி ஆவணங்களை தயாரித்து 300 கோடி ரூபாய் வரை ஏமாற்றிய டிப் டாப் வாலிபரை போலீசார் கைதுசெய்துள்ளனர். அவரிடமிருந்து 3 கோடி ரூபாய் வரை உயர்ரக காரை பறிமுதல் செய்தனர்.

வெளிநாட்டில் எம் பி ஏ  படித்த ஹர்ஷவர்தன் ரெட்டி என்ற இளைஞர் மீது சென்னை, மும்பை, டெல்லி, என பல்வேறு நகரங்களில் முறைகேடு வழக்குகள் பதிவாகியுள்ளன. இவரை போலீசார் நாடுமுழுவதும் வலைவீசி தேடி வந்த நிலையில் டெல்லியில் கைதுசெய்யப்பட்டார்.

போலீசார் அவர் நடத்திய விசாரணையில் முறைகேடாக சம்பாதித்த ரூ 300 கோடி பணத்தை பல்வேறு தொழில், வர்த்தக நிறுவனங்களில் முதலீடு செய்திருப்பதை கண்டுபிடித்தனர். மேலும் செய்தியாளர்களிடம் பேசிய தெற்கு டெல்லி போலீஸ் அதிகாரி ஈஸ்வர் சிங் இவரைப்பற்றி கூறினார். இவர் மீது இந்தியாவின் பல்வேறு நகரங்களில் முறைகேடு வழக்குகள் பதிவாகியுள்ளதாக  கூறினார்.

மேலும் அவர்,  பெரும் பணக்காரர்களிடமிருக்கும் பங்களாக்களை குத்தகைக்கு எடுப்பது இவரது வழக்கம் என்றும் சிலநாட்களுக்குப் பின்னர் அந்த பங்களாக்களின் மதிப்பை அதிகப்படுத்தி போலியான ஆவணங்களை   தயாரித்து அதை வங்கியில்  அடமானமாக   வைத்து  கோடிக்கணக்கான பணத்தை பெற்று தலைமறைவாகி விடுவார் என்று கூறினார். இவர் டெல்லியில் பதுங்கியிருக்கும் தகவல் கிடைத்தது. அதையடுத்து தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

இவரிடம் மூன்றுவிதமான பான் கார்டுகள் இருந்தன. சென்னை கோபாலபுரத்திலிருக்கும் நேசனல் பப்ளிக் பள்ளியில் படித்தவர் என்றும் ஆஸ்ட்ரேலியாவில் எம் பி ஏ படித்துள்ளார் என்றும் போலீசார் கூறியுள்ளனர்,