சென்னை,

திமுக அம்மா (சசி அதிமுக) அணி வேட்பாளரான டிடிவி தினகரன் மீதான அன்னி செலாவணி மோசடி வழக்கு நாளை முதல் தினமும் நடைபெறும்  எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் அதிரடி யாக அறிவித்து உள்ளது. மேலும் அவர் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவையும் தள்ளுபடி  செய்து உத்தரவிட்டது.

கடந்த 1994ஆம் ஆண்டு, லண்டனில் இருந்து, ‘லெக்சஸ்’ என்ற சொகுசு காரை, பழைய கார் என ஏமாற்றி இறக்குமதி செய்ததில், ரூ.1 கோடி அளவில்  வரி ஏய்ப்பு செய்ததாக அவர்மீது ‘பெரா’ வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்த வழக்கு சென்னை எழும்பூர் பொருளாதார குற்ற வியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை விரைந்து முடிக்க  சிபிஐ கோரியிருந்தது.

அதைத்தொடர்ந்து வழக்கின் இறுதி விசாரணை பிப்ரவரி 27ம் தேதி நடக்கும் என நீதி மன்றம் அறிவித்தது.  அதையடுத்து  டிடிவி தினகரன் மீதான வழக்கு தற்போது வேகமெடுத்துள்ளது.

இந்நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், டிடிவி தினகரன் சசி அணி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் முடியும் வரை விசாரணையை தள்ளிவைக்க டிடிவி தினகரன் கோரியிருந்தார்.

ஆனால், அவரது கோரிக்கையை நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. மேலும், டி.டி.வி.  தினகரன் மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்கு நாளை முதல் தினமும் விசாரணை நடைபெறும் என்று சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமலாக்கத்துறை விடுத்திருந்த கோரிக்கையை ஏற்று சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.