சென்னை,

மிழகத்தில் திரைப்பட தயாரிப்பாளர்களும், தொழிலாளர்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக நேற்று முதல் திரைப்பட தொழிலாளர்கள் (பெப்சி) ஸ்டிரைக் தொடர்கிறது.

இன்று இரண்டாவது நாளாக பெப்சி அமைப்பினரின் போராட்டம் தொடரும் நிலையில், பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி , நடிகர் ரஜினிகாந்தை திடீரென சந்தித்து பேசினார்.

சம்பள விவகாரம் தொடர்பாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும், பெப்சி தொழி லாளர்கள் அமைப்புக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக படப்பிடிப்பு தடைபட்டுள்ளது.

படப்பிடிப்பை,  பெப்சி  தொழிலாளர்கள் இல்லாமல், யாரை வேண்டுமானாலும் வைத்து படப்பிடிப்பு நடத்தலாம் என்று  தயாரிப்பாளர் சங்கத்தில் எடுக்கப்பட்டது. மேலும், பெப்சி தொழிலாளர்ளின் சம்பள பிரச்சினையிலும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதற்கு பெப்சி அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

அதன்படி நேற்று முதல் பெப்சி தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் தொடங்கி உள்ளது. இதன் காரணமாக ரஜினிகாந்தின் காலா மற்றும் விஜய்யின் மெர்சல் உள்பட  30க்கும் மேற்பட்ட படங்களின் படப்பிடிப்பு தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி ரஜினிகாந்தை சந்திது பேசினார். இதன் காரணமாக பெப்சி விவகாரம் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.