திருநெல்வேலி :

ளம்பெண்ணை காரில் கடத்தியதாக அ.தி.மு.க.,ராஜ்ய சபா எம்.பி.,முத்துக்கருப்பனின் மகன் உள்ளிட்ட சிலர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருநெல்வேலியை அடுத்துள்ள சுத்தமல்லியை சேர்ந்த சுப்பிரமணியன் மகள் கிருஷ்ணவேணி ( வயது 25)  எம்.பிஏ.,படித்துள்ளார்.

திருநெல்வேலி  காமாட்சியம்மன்கோயில் தெருவைசேர்ந்த சுந்தரராஜன் மகன் பொன்ராஜ் என்ற கண்ணன். இவர்  சென்னையில் ஐ.டி.,நிறுவனம் ஒன்றில் பணியாற்றிவருகிறார்.

முத்துக்கருப்பன்

கிருஷ்ணவேணியும் பொன்ராஜ் (எ) கண்ணனும் கல்லூரியில் படிக்கும் போது காதலித்தனர். கடந்த 2015ல் இருவரும் பதிவு திருமணம் செய்துகொண்டனர். இதற்

இந்த நிலையில் இருவரும் நேற்றுமுன்தினம் பெருமாள்புரம்  காவல்நிலையத்தில் புகார் செய்தனர். அதில் கிருஷ்ணவேணி குடும்பத்தினரால் தாங்கள் தாக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியிருந்தனர்.

ஆனால் காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே கிருஷ்ணவேணியை, நெல்லை டவுனில் உள்ள தனது நண்பர் வீட்டில் தங்கவைத்துவிட்டு பொன்ராஜ் சென்னைக்கு சென்றார்.

இந்த நிலையில் அ.தி.மு.க.,ராஜ்யசபா உறுப்பினராக உள்ள முத்துக்கருப்பனின் மகன் ஹரிகரசிவசங்கர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து  கிருஷ்ணவேணியை காரில் கடத்தினார்.  கீழநத்தத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டில் தங்க வைத்தார். ஆனால் அங்கிருந்து தப்பிவந்த கிருஷ்ணவேணி, தன்னை கடத்தியவர்கள் குறித்து சுத்தமல்லி காவல்நிலையத்தில் புகார் செய்தார்.

இதையடுத்து  அ.தி.மு.க.,எம்.பி.,மகன் ஹரிகரசிவசங்கர் மற்றும் மனோஜ்குமார், ஐயப்பன் மற்றும் 8 பேர் மீது 147, 506 (2) மற்றும் கடத்தல் பிரிவு 363ன் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இதுதொடர்பாக கிருஷ்ணவேணியின் சகோதரர் உள்ளிட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த நிலையில் கிருஷ்ணவேணி, “அதிமுக எம்.பி. முத்துகருப்பண் எங்களது உறவினர்தான். என்னை என் கணவரிடமிருந்து  பிரிக்க வேண்டும் என்று எனது குடும்பத்தினர் அவரிடம் தெரிவித்திருக்க வேண்டும். இதையடுத்தே அவரது மகன்   ஹரிகரசிவசங்கர் தனது கூட்டாளிகளுடன்  என்னை கடத்தினார்” என்று தெரிவித்துள்ளார்.