·          சென்னை:

சென்னையில்  மெட்ரோ ரயில் சுரங்கப் பணிகள் நடந்து வரும் பகுதிகளில் உள்ள சாலைகளில் விரிசல்கள், பள்ளங்கள் ஏற்பட்டு வருவது மக்களை அச்சத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அண்ணாசாலை ஜெமினி மேம்பாலம் அருகே ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் பேருந்து மற்றும் கார் விழுந்தன.  இந்த அதிர்ச்சி விலகுவதற்குள் அதே பகுதியில், கடந்த சில நாள்களுக்கு முன் சாலையில் விரிசல் ஏற்பட்டது.

இந்த நிலையில் நள்ளிரவு வண்ணாரப்பேட்டையில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து கொண்டிருக்கும் போது, அருகே உள்ள வீடு ஒன்றில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இதையடுத்து, வீட்டில் இருந்தவர்கள் பயந்து அலறியபடியே  வெளியே ஓடி வந்தனர்.

மேலும், மின்ட் பாரத் தியேட்டர் அருகே சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள்  பீதியில் ஆழ்ந்துள்ளனர்.