இன்று: சித்திரை புத்தாண்டு வழிபாட்டு முறை

Must read

சித்திரை முதல் நாளான இன்று இல்லத்தை நன்றாக கூட்டி தூய்மை செய்ய வேண்டும்.  கோலமிட்டு அழகுபடுத்த வேண்டும். வாசல் படிகளுக்கு மஞ்சள் குங்குமம் இட்டு, மாவிலைத் தோரணங்களை கட்ட வேண்டும்.

வாசல்படி நிலைவாயிலில் மஞ்சள் பூசி, மெழுகி, கோலமிட்டால் திருமகள் வாசம் செய்வாள்.

மஞ்சள், குங்குமம் ஆகிய இரண்டு நோய்க் கிருமிகளும் துஷ்ட தேவதைகளும் வாசல்படியை தாண்டி வராமல் தடுக்கும் சக்திகளாகும்.

அதே போல இன்று விசிறி தானம் செய்ய வேண்டும்.

சித்திரை மாதத்தில் சூரியன் மேஷ ராசியில் மிகவும் உச்சமாக பிரகாசிப்பார். ஆகையால் அன்றைய தினம் பானகம், நீர், மோர், பருப்புவடை ஆகியவற்றை நைவேத்தியம் செய்ய வேண்டும். ஏழைகளுக்கும், உறவினர்களுக்கும் புதிய விசிறிகளை தானம் செய்ய வேண்டும்.

அனைவருக்கும்  patrikai.com  இதழின் இனிய சித்திரை நல் வாழ்த்துகள்!

More articles

Latest article