அவசர வேலை நிறுத்தம் – படப்பிடிப்புகள் ரத்து

Must read

fefsi-president
கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் ஒளிப்பதிவாளர் சங்க தலைவர் பி.சி.ஸ்ரீராம் பெப்சி தலைவர் ஜி.சிவா மீது புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் எதிரொலியாக பெப்சி தலைமையில் இன்று படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாது என்றும், பொய்யான குற்றச்சாட்டை சிவா மீது கொடுத்துள்ளதை கண்டிக்கும் வகையில் இன்று ஒருநாள் வேலை நிறுத்தம் செய்யப் போவதாகவும் அறிவித்துள்ளார்கள்.
இந்த ஒருநாள் வேலை நிறுத்தத்தின் காரணமாக இன்று படப்பிடிப்புகள், பாடல் பதிவுகள், எடிட்டிங், டப்பிங் உள்ளிட்ட அனைத்து பணிகளும் நடைபெறாது என பெப்சி செயற்குழுவில் முடிவு எடுக்கப்பட்டதாம்.

More articles

Latest article