சென்னை :

மிழகத்தில் சட்டம், ஒழுங்கு பாதிக்கபட்டிருப்பதால் மக்களிடம் பயம் ஏற்பட்டுள்ளது என்று திமுக எம்.பி. கனிமொழி கூறினார்.

தமிழகத்தில் கொள்ளை, கொலை, வன்கொடுமை போன்ற நிகழ்வுகள் அன்றாடம் நடைபெற்று வருகின்றன. சமீப காலமாக காவல் துறையினரின் அலட்சியப்போக்கு காரணமாக சிறுமிகள்  கடத்தல், வன்கொடுமைகளும் அதிகரித்து உள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் சிறுமிகள்மீதான வன்கொடுமை 300 சதவிகிதம் அதிகரித்திருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பம் தெரிவித்துள்ளது.

இதுபோன்ற சூழல் காரணமாக கடந்த சில நாட்களாக மனம் நலம் பாதிக்கப்பட்டவர்கள், முதியோர் போன்ற பலர், குழந்தை கடத்து பவர்கள் என எண்ணி, தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர். இதன் காரணமாக வயது முதிர்ந்த பெண்மணி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த திமுக எம்.பி. கனிமொழி கூறியதாவது,

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே  மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக பொதுமக்கள் மத்தியில் பதட்டமும், பயமும் உள்ளது என்று குற்றம் சாட்டினார்.

மக்கள் மத்தியில்  எழுந்துள்ள பயம் காரணமாகத்தான், அவர்கள் சாதாரணமானவர்களையும்,  குழந்தை கடத்தல்காரர்கள் என நினைத்து தாக்குதல் நடத்துகிறார்கள் .

இவ்வாறு அவர் கூறினார்.