சென்னையில் மாஞ்சா நூல் தயாரித்து விற்பனை செய்த தந்தை, மகன் கைது

Must read

சென்னை:
சென்னையில் மாஞ்சா நூல் தயாரித்து விற்பனை செய்த தந்தை மகன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2015 ஆம் ஆண்டில் சென்னை பெரம்பூர் மேம்பாலத்தில் கடந்த 27ம் தேதி தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற அஜய் என்ற 5 வயது சிறுவனின் கழுத்தை, வானில் பறந்து வந்த மாஞ்சா நூல், அறுத்தது. இதில், அவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

இதையடுத்து மாஞ்சா நூல் விற்றாலோ, மாஞ்சா நூலில் பட்டம் செய்து விற்றாலோ 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று காவல் துறை எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில், சென்னையில் மாஞ்சா நூல் தயாரித்து விற்பனை செய்த தந்தை மகன் கைது செய்யப்பட்டுள்ளனர். தந்தை அக்மேல்லா, மகன் ஜேடன் அவர்களிடமிருந்து 50 பட்டங்கள், மாஞ்சா நூல்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

More articles

Latest article