சென்னை:
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலத்துடன் அதிமுகவினர் பலரும் திமுகவில் இணைந்தனர்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவை அடுத்து திமுக தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், சமீபகாலமாக திமுகவில் மாற்று கட்சியினர் தங்களை இணைத்துக் கொண்டு வருகின்றனர்.

கடந்த 8-ஆம் மக்கள் நீதி மய்யத்தில் இருந்து வெளியேறிய டாக்டர் மகேந்திரன் உள்ளிட்டோர் திமுகவில் இணைந்தனர். இந்நிலையில், அதிமுகவின் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

இவருடன் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் உட்பட 300 பேர் திமுகவில் இணைந்தனர்.