ஸ்ரீநகர்

ரு மாதங்களாகக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஃபரூக் மற்றும் உமர் அப்துல்லாவை தேசிய காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் சந்தித்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி மத்திய அரசு விதி எண் 370 ஐ விலக்கி அம்மாநிலத்துக்கு அளித்துள்ள சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது.  அப்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக முன்னாள் முதல்வர்கள் உள்ளிட்ட பல எதிர்க்கட்சி தலைவர்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.    இவர்களில் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர்கள் ஃபரூக் அப்துல்லா மற்றும் அவர் மகன் ஓமர் அப்துல்லா உள்ளனர்.

இவர்கள் இருவரையும் சந்திக்க அக்கட்சியின் தலைவர்கள் ஆளுநர் சத்யபால் மாலிக் இடம் அனுமதி கோரினார்கள்.   வெகு நாட்களாக அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தற்போது  ஆளுநர் அனுமதி அளித்துள்ளார்.  இதையொட்டி தேசிய மாநாட்டுக் கட்சி மாநிலத் தலைவர் தேவேந்திர சிங் ராணா தலையில் ஒரு குழு இன்று காலை ஃபரூக் அப்துல்லா மற்றும் அவர் மனைவியையும் மற்றொரு இடத்தில் காவலில் உள்ள ஓமர் அப்துல்லாவையும் சந்தித்தனர்.

 

இது குறித்து தேவேந்திர சிங் ராணா, “அவர்கள் இருவரும் மகிழ்ச்சியுடனும் நல்ல உடல் நலத்துடனும் காணப்பட்டனர்.   அதே வேளையில் தற்போது மாநிலத்தில் நிலவும் நிலை குறித்து அவர்களுக்கு வருத்தம் உள்ளது.    வீட்டுக்காவலில் உள்ள முக்கியத் தலைவர்களை விடுதலை செய்ய வேண்டிய நடவடிக்கைகளை அரசு விரைவில் எடுக்க வேண்டும்.  எங்களைக் கண்ட ஃபரூக் அப்துல்லா எங்களிடம் வெற்றி என்னும் இரு விரல் சின்னத்தைக் காட்டினார்.” எனத் தெரிவித்துள்ளார்.