விசாகப்பட்டினம்

விசாகபடினத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை  203 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது.

விசாகப்பட்டினத்தில் இன்று முடிந்த  முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 502 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. அதற்குப்  பிறகு ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி தன் முதல் இன்னிங்சில் 431 ரன்களுக்கு ஆட்டமிழந்தது  இந்திய அணி. 71 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் இரண்டாவது இன்னிங்சில், 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 323 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது.

தன் 2வது இன்னிங்சை 395 ரன்கள் வெற்றி இலக்குடன் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி நேற்றைய 4ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 11 ரன்கள் எடுத்திருந்தது.   இன்று தென் ஆப்பிரிக்க அணிக்குத் தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது.    இன்றைய  போட்டியில்  நிதானமாக ஆடி வந்த ப்ரூயினின் விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தினார்.

இதன் மூலம் குறைந்த டெஸ்ட் போட்டிகளில் 350 விக்கெட்டுகள் கைப்பற்றிய இலங்கை முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் சாதனையை அஸ்வின் சமன் செய்தார்.

அதன்  பிறகு களமிறங்கிய பவுமா விக்கெட்டை கைப்பற்றி ஷமி அசத்தினார்.தொடர்ந்து வந்த கேப்டன் டூபிளேசிஸ், விக்கெட் கீப்பர் டி காக் ஆகியோரின் விக்கெட்டுகளையும் வீழ்த்தி தென் ஆப்பிரிக்க அணியை நிலைகுலைய செய்தார். பிறகு களமிறங்கிய பிலேண்டர், மகாராஜ் ஆகியோரின் விக்கெட்டுகளை சுழற்பந்துவீச்சாளர் ரவீந்திர ஜடேஜா, அடுத்தடுத்து வீழ்த்தியது. தென் ஆப்பிரிக்கா அணியை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அத்துடன் 2வது இன்னிங்சில் 10.5 ஓவர்களில் 2 மெய்டன்களுடன் 35 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்கள் எடுத்தார் ஷமி. மேலும், ஜடேஜா 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.

இன்று  தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.