விசாகப்பட்டினம்

ன்று விசாகப்பட்டினத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன் 350 ஆம் விக்கட்டை வீழ்த்தி சாதனை  புரிந்துள்ளார்.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு இடையிலான முதல் டெஸ்ட் பந்தயம் இன்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது.   போட்டியின் இன்றைய கடைசி நாள் ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெறும் நிலையில் உள்ளது.   ஏற்கனவே நடந்த ஒரு நாள் போட்டிகளில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளன.

இந்திய கிரிக்கெட் வீரரான அஸ்வின் ரவிச்சந்திரன் இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் 7 விக்கட்டுக்ளை வீழ்த்தி மக்கள் மனதைக் கவர்ந்தார்.   அப்போது அவர் தனது டெஸ்ட் பந்தயங்களின் 349 ஆம் விக்கட்டுகளை அப்போது வீழ்த்தி  இருந்தார்.   இன்று அவர் தனது 350 ஆம் டெஸ்ட் விக்கட்டுகளை வீழ்த்தி சாதனை புரிந்துள்ளார்.

ஏற்கனவே முத்தையா முரளிதரன் செய்துள்ள சாதனையை அஸ்வின் சமன் செய்துள்ளார்.  இரு வீரர்களூம் 66 போட்டிகளில் 350 விக்கட்டுகளை வீழ்த்தி உள்ளனர்.   அதே வேளையில் ஓவர் கணக்கில் முத்தையா முரளிதரன் இந்த சாதனையை 360.5.2 ஓவர்களில் நிகழ்த்தி உள்ளார்.  அஸ்வின் 3200க்கும் குறைவான ஓவர்களில் இந்த சாதனையைப் புரிந்து முதல் இடத்தில் உள்ளார்.