ம.பி. விவசாயிகள் போராட்டத்துக்கு காரணம் ‘பணமதிப்பிழப்பே’!

போபால்,

த்தியபிரதேசத்தில் விவசாயிகள் போராட்டத்துக்கு மூல காரணம் மத்திய அரசு கொண்டு வந்த பண பரிவர்த்தனை கட்டுப்பாடுகளே காரணம் என மத்திய பிரதேச வர்த்தகர்கள் கூறி உள்ளனர்.

மத்தியப் பிரதேசத்தில் ஜூன் 1ந்தேதி முதல் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மத்தியபிரதேசத்தில் முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாரதியஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது.  இங்கு மாநில பாரதியஜனதா அரசின் நிர்வாக சீர்கேடு காரணமாக  விவசாயிகளின் தற்கொலை அதிகரித்து வருகிறது.

கடந்த 3 மாதங்களில் மட்டும் 287 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ள அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில்,  கடந்த 6ம் தேதி மத்தியப் பிரதேசத்தில் உள்ள மான்ட்சர் மாவட்டத்தில் நடைபெற்ற விவசாயிகள் பேரணியின்போது வன்முறை வெடித்தது. அப்போது, போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 6 விவசாயிகள் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.

இதையடுத்து மாநிலம் முழுவதும் விவசாயிகள் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், விவசாயிகளிடம் இருந்து பொருட்களை வாங்கும் வர்த்தகர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

மத்தியபுபிரதேசத்தில் பண பரிவர்த்தனை கட்டுப்பாடுகள் காரணமாகவே விவசாயிகள் போராட்டத்துக்கு தள்ளப்பட்ட சூழ்நிலை ஏற்பட்டதாக வர்த்தகர்கள் கூறி உள்ளனர்.

தாங்கள் அறுவடை செய்த தானியங்களை முறையாக விற்பனை செய்ய தடை, பண பரிமாற்றம் போன்ற பிரச்சினைகளால், மத்திய பிரதேசத்தில் விவசாயிகள் போராட்டம் செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் கூறி உள்ளனர்.

விவசாயிகள் அறுவடை செய்த தானியங்களை வர்த்தகர்களிடம் விற்பனை செய்யும்போது, அதற்கான பணம், பண பரிவர்த்தனை செய்வதில் உள்ள கட்டுப்பாடுகள் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதிலிருந்து  விவசாயிகள் தங்களை காத்துக்கொள்ளவே ஆர்ப்பாட்டம் செய்துவருவதாகவும் பட்டிதர் கிசான் சங்கத்தின் தலைவரான முகேஷ் பாட்டீர் கூறி உள்ளார்.

மத்தியஅரசு நோட்டு தடை அமல்படுத்தியதிலிருந்தே, விவசாயிகள் அரசு மீது கோபமடைந்துள்ளார்கள். இதன் காரணமாக விவசாய பொருட்களை வாங்கும் வர்த்தகர்களுக்கும், விவசாயிகளுக்கும் மோதல் ஏற்படுகிறது. காரணம், வங்கிகளிடமிருந்து போதுமான பணத்தை நாங்கள் பெறமுடியவில்லை, விவசாயிகளுக்கு பணத்தை கொடுக்க முடியவில்லை என்றும்

வருமான வரியின் புதிய விதிகளின்படி, 10,000 ரூபாயை விட அதிக பணத்தை நாம் பெற முடியவில்லை. இதன் காரணாக விவசாயிகளுக்கு , நாங்கள் காசோலையை அளிக்க வேண்டியுள்ளது.

இது பல விவசாயிகளுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தி உள்ளது. பணத்திற்கு, “தடை விதிக்கப்பட்ட பிறகு பிரச்சனை அதிகரித்துள்ளது, சிறிய விவசாயிகள் இங்கே தங்கள் பொருட்களை விற்பனை செய்ய வந்துள்ளனர், மேலும் அவர்கள் பணம் சம்பாதிக்க வேண்டும்” ஆனால், பண வழங்கல் நீண்ட காலமாக பாதிக்கப்பட்டுள்ளது என்று, தாஸ்பூர் மண்டி வியாபாரி சங்க தலைவர் ரவீந்தர் குமார் நாகர் தெரிவித்துள்ளார்.

தற்போது விவசாயிகள் போராட்டம் காரணமாக, விவசாயிகள் தங்கள் உற்பத்தி செய்த தானியங்களை சந்தைக்கு கொண்டு வராத சூழ்நிலையில், பணமளிப்பு மற்றும் புதிய பண விவகாரங்கள் ஆகியவற்றால் மாநிலத்தில் கடும்  பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் வர்த்தகர்கள் கூறியுள்ளனர்.


English Summary
Farmers, traders of Mandsaur in Madhya Pradesh blame demonetisation for the present problems