சென்னை,
இன்று முழு அடைப்பையொட்டி தமிழகம் முழுவதும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இதுவரை 54 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதமாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
டில்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் இன்று முழு அடைப்பு நடத்த திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.
திமுகவின் கோரிக்கையை ஏற்று காங்கிரஸ், வி.சி, கம்யூனிஸ்டு, மனிதநேய மக்கள் கட்சி உள்பட எதிர்க்கட்சிகள், சமுதாய அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன.
போராட்டத்துக்கு வணிகர் சங்கங்கள், லாரி, ஆட்டோ, டாக்சி ஓட்டுநர் சங்கங்கள், ஓட்டல் உரிமையாளர்கள், கோயம்பேடு வணிகர்கள், போக்குவரத்த சம்மேளன தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து தமிழகம் முழுவதும் பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படவில்லை. பெரும்பாலான பகுதிகள் வெறிச்சேடி காணப்பட்டன.
இந்நிலையில், தமிழகம் முழுவதும், மத்திய மாநில அரசுகளை கண்டித்து எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தினர். பல இடங்களில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
பாண்டிச்சேரி அருகே பேருந்துகளின் கண்ணாடி கல்வீசி உடைக்கப்பட்டது.
இன்றைய போராட்டத்தின்போது, திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், தொல் திருமாவளவன், கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் முத்தரசன், ராமகிருஷ்ணன், காங்கிரஸ் தலைவர்கள் திருநாவுக்கரசு, முன்னாள் தலைவர் தங்கபாலு, திராவிடர் கழக தலைவர் கீரமணி உள்பட, மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்திய திமுக முன்னாள் அமைச்சர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உள்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் இன்று காலை முதல் நடைபெற்ற போராட்டம் காரணமாக 54000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
சென்னை மட்டும் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றனர்.
கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.