சென்னை,
விவசாயிகள் மரணம் தொடர்பாக விவாதிக்க தமிழக சட்டமன்றத் உடடினயாக கூட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இயற்கை பொய்த்துபோனதாலும், கர்நாடகா காவிரி நீர் மறுப்பதாலும் விவசாயத்திற்கு போதிய நீர் இன்றி ஏற்கனவே பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் கருகி வேதனையை ஏற்படுத்தி வருகின்றன. வானம் பார்த்த பூமியாக விவசாய நிலம் காய்ந்துகிடக்கிறது.
இதைக்காணும் விவசாயிகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி மரணத்தை தழுவி உள்ளனர். பலர் தற்கொலை முடிவை எடுத்துள்ளனர்.  தமிழ்நாட்டில் இதுவரை 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் மரணமடைந்துள்ளனர்.
நேற்று ஒருநாள் மட்டுமே 5 விவசாயிகள் மரணமடைந்திருப்பது தமிழக மக்களை வேதனை கொள்ள செய்துள்ளது.
அதன் காரணமாக தமிழகத்தை வறட்சி மாநிலமாக மாற்ற வேண்டும் என்று தமிழக விவசாய சங்கத்தினர் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். நேற்று எலிக்கறி தின்னும் போராட்டம் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன் காரணமாக, தமிழகத்தில் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண்டும் தமிழக எதிர்க்கட்சி தலைவரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் தமிழக அரசுக்கு வேண்டு கோள் விடுத்துள்ளார்.