சென்னை,
திமுக பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்றார்.
அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட சசிகலா இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளராக பதவி ஏற்றார்.
நேற்று மாலை ஜெயலலிதா சமாதி சென்று மலர் தூவி  கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திவிட்டு இன்று கட்சி தலைமை அலுவலகம் வந்து பொதுச்செயலாளராக பதவி ஏற்றுகொண்டார்.
பொதுச்செயலாளர் பதவி ஏற்க வந்த சசி, ஜெயலலிதா உபயோகப்படுத்திய அதே காரிலேயே தலைமை அலுவலகம் வந்தார். ஜெயலலிதா உட்காரும் அதே நாற்காலியிலேயே உட்கார்ந்து தனது கனவை நிறைவேற்றினார்.
சசிகலா பொறுப்பேற்பதையொட்டி,  சென்னை மாநகரம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
சசிகலா பதவி ஏற்க செல்லும்போது, அவருடன்  நிறைய கார்கள் அணிவகுத்து சென்றதால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போலீசார் ஏதோ பிரதமர், ஜனாதிபதி வருகைக்கு கொடுப்பது போல அதீத பாதுகாப்பு கொடுத்தி ருந்தனர்.  இது பொதுமக்களிடையே கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
சசிகலா பொறுப்பேற்றதை தொடர்ந்து ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகம் பகுதியில் அதிமுக தொண்டர்கள் உற்சாக கோஷமிட்டு வெடிகளை கொளுத்தினர்.