சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் , பச்சை நிற துண்டு அணிந்து தமிழக சட்டப்பேரவையில் 3வது முறையாக வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். பட்ஜெட்டை வாசித்து வருகிறார்.
மாப்பிள்ளை சம்பா சாப்பிட்டால் மாப்பிள்ளை மாதிரி இருக்கலாம், தங்க சம்பா சாபிட்டால் தங்கம் மாதிரி இருக்கலாம் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார். அவையில் சிரிப்பலை எழுந்தது. முதலமைச்சர் உள்பட அனைவரும் சிரித்து மகிழ்ந்தனர்.
அமைச்சரின் நகைச்சுவையைத் தொடர்ந்து, பேசிய சபாநாயகர் அப்பாவு, அனைவருக்கும் கொடுங்க சாப்பிட தயாராகத்தான் இருக்கிறார்கள் என கூறினார். இதானால் அவையில் மேலும் சிரிப்பலை எழுந்தது.
மேலும், தமிழ்நாட்டில் 23 லட்சம் மின் இணைப்புகளுக்கு இலவச மின்சாரம் வழங்க ரூ.6,536 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
மேலும் கடலூர் கோட்டைமலை கத்திரி, மதுரை செங்கரும்பு, சிவகங்கை கருப்பு கவுனி அரிசி ஆகியவற்றிற்கு புவிசார் குறியீடு பெற ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் திட்டமிடப்பட்டுள்ளது.
தக்காளி மற்றும் வெங்காயம் அவ்வப்போது பற்றாக்குறை மற்றும் விளைச்சல் காரணமாக விலையேற்றம் மற்றும் இறக்கம் காணப்படுவதுண்டு. இந்தநிலையில் தக்காளி மற்றும் வெங்காயம் ஆண்டு முழுதும் சீராக கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவித்துள்ளார்.
இதற்காக தக்காளிக்கு ₹19 கோடியும், வெங்காயத்துக்கு ₹29 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வேளாண்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
சாகுபடி பணிகளை காலத்தில் மேற்கொள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ரூ.14,000 கோடி பயிர் கடன்.
திருச்சி , நாகை இடைப்பட்ட காவிரி டெல்டா பகுதி வேளாண் சார்ந்த தொழில் பெருந்தடமாக அறிவிப்பு
காவிரி படுகை உழவர்களின் வருமானத்தை அதிகரிக்கவும், வேலைவாய்ப்பை உருவாக்கவும் “காவிரி படுகை பெருந்திட்டம்”
இந்த பகுதியில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் வேளாண் சார்ந்த தொழில்களை வளர்த்தெடுக்க ரூ.1000 கோடி ஒதுக்கீடு-அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.
ரூ.3 கோடியில் பூச்சிகள் அருங்காட்சியகம் மேம்பாடு; பூச்சிகள் பற்றிய புரிதலை அதிகரிக்க கோவை வேளாண் பல்கலைகழகத்தில் உள்ள பூச்சிகள் அருங்காட் சியகம் மேம்படுத்தப்படும்.