சென்னை: ஆஸ்கர் வென்ற ’The Elephant Whisperers’  இயக்குநருக்கு ரூ.1 கோடி ஊக்கத்தொகை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டினார்.

தமிழக முதுமலை காட்டில் தயாரிக்கப்பட்ட  “தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்” ஆவணப் படத்தின் இயக்குநர் செல்வி. கார்த்திகி கொன்சால்வ்ஸ்-க்கு தமிழ்நாடு அரசு சார்பில், உயரிய ஊக்கத் தொகைக்கான ரூ.1 கோடிக்கான காசோலையை தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கினார். அத்துடன்  சான்றிதழும் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

கடந்த மார்ச் 12 ஆம் தேதி அமெரிக்காவின்லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆஸ்கர் விருது விழா நடைபெற்றது. திரையுலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விழாவில் சிறந்த ஆவண குறும்படத்திற்கான விருது இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட “The Elephant Whisperers”-க்கு கிடைத்தது. இதற்கான விருதை  இயக்குநர் கார்த்திகி கோன்சால்வ்ஸ் பெற்றுக் கொண்டார். இதேபோல் இந்தியாவில்  இருந்து அனுப்பப்பட்ட ஆர்.ஆர்.ஆர். படத்தில் இடம் பெற்ற “நாட்டு நாட்டு” பாடல் சிறந்த பாடல் பிரிவில் விருது வென்றது.

ஆஸ்கர் விருது இந்திய படங்களுக்கு கிடைத்ததை இந்தியாவே கொண்டாடியது. அந்த வகையில் “The Elephant Whisperers” ஆவண குறும்படத்தின் இயக்குநர் கார்த்திகி கோன்சால்வ்ஸூக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.1 கோடி ஊக்கத்தொகையும், சான்றிதழும் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.