சென்னை

பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் லாரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி காதலில் விழுந்தேன், டிஸ்யூம், வேட்டைக்காரன், உள்பட பல்வேறு படங்களுக்கு படங்களுக்கு இசையமைத்துள்ளார்  மேலும் இவர் காளி, நான், சைத்தான், பிச்சைக்காரன் உள்பட பல்வேறு படங்களிலும் நடித்துள்ளார். விஜய் ஆண்டனிக்கு லாரா என்ற +2 பயிலும் மகள் உள்ளார்.

தனது குடும்பத்துடன் விஜய் ஆண்டனி சென்னை டிடிகே சாலையில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.  இன்று அந்த வீட்டில், விஜய் ஆண்டனியின் மகள் லாரா இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் தனது அறையில் மின் விசிறியில் லாரா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

காலை லாராவின் அறைக் கதவு வெகுநேரமாகத் திறக்காததால் கதவைத் திறந்துகொண்டு உள்ளே சென்று பார்த்த பெற்றோர் மகள் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாகக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.  இது குறித்துத் தகவலறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று லாராவின் உடலை மீட்டு பிரேதப்பரிசோதனைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவலர் விசாரணை நடத்தி வருகையில் லாரா மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.  பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.