சென்னை: பிரபல ரவுடி கரிமேடு அன்புவை போலீசார் கைது செய்துள்ளனர். மாமூல் கேட்டு மிரட்டிய சம்பவத்தில் ரவுடி கரிமேடு அன்புவை போலீஸ் சென்னை வியாசர்பாடி எம்.கே.பி. நகரில் கைது செய்துள்ளனர்.
சென்னையில் பிஎஸ்பி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு ரவுடிகள் வேட்டையாடப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், போலீஸாரால் தேடப்பட்டு வந்த ரவுடி கரிமேடு அன்பு கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் கூறியுள்ளனர்.
சென்னை பெருநகரக் காவல் ஆணையர் உத்தரவின் பேரில், குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட தேடப்படும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அவ்வாறு தேடுதல் பணியில் இருந்தபோது, கரிமேடு அன்பு என்ற ரவுடி சென்னை எம்.கே.பி நகரில் பதுக்கி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, அங்கு சென்ற காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.
ரவுடி கரிமேடு அன்பு என்பவர், கே.கே.நகரைச் சேர்ந்த குமரவேல் என்பவர் மகன். இவர் பெயர் அன்பு, இவர் கரிமேடு அன்பு என்று அழைக்கப்பட்டு வருகிறார். முன்னாள் ரவுடி சேரா என்ற ராஜேந்திரன் கும்பலைச் சேர்ந்தவர். இவர்மீது, 2002ம் ஆண்டு செந்தில் என்பவரை கொலை செய்த வழக்கு உள்பட கொலை முயற்சி, ஆள்கடத்தல், வழிப்பறி உள்ளிட்ட 17க்கும் மேற்பட்ட வழக்குகள் சோழவரம், பொன்னேரி, எம்.கே.பி.நகர், ராயபுரம், கொடுங்கையூர் காவல் நிலையங்களில் இருப்பதாக கூறப்படுகிறது.