சென்னை: முதல்வர் ஸ்டாலினின் ‘உங்களின் ஒருவன்’ பதில் இன்று வெளியான நிலையில், அதுகுறித்து இயக்குனர் ரஞ்சித் கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழ்நாட்டில் மிகக் கொடுமையான சாதியரீதியிலான வன்கொடுமைகள் தங்கு தடையின்றி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதை முதல்வர் ஸ்டாலின் ஒப்புக்கொள்வாரா என்றும், நாங்கள் வேண்டுமானால் தலித்துகள் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கிறோம் என தெரிவித்துள்ளார்.
‘உங்களில் ஒருவன் பதில்கள்’ மூலமாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டு பதில் அளித்துள்ளார். அதில், தனது ஆட்சி குறித்து புகாழரம் சூட்டியதுடன், திமுக ஆட்சியில்தான் பெண்கள் முன்னேற்றம் நடைபெற்று இருப்பதாகவும் சட்டம் ஒழுங்கு சரியாக உள்ளதாகவும் சிலாகித்து பேசியிருக்கிறார்.
இந்த நிலையில், இயக்குநர் பா. ரஞ்சித் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோவை எக்ஸ் தளத்தில் பதிவிட்டு அவருக்கு கேள்வி எழுப்பி உள்ளார். அதுகுறித்துரஞ்சித் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
தமிழ்நாட்டில் மிகக் கொடுமையான சாதியரீதியிலான வன்கொடுமைகள் தங்கு தடையின்றி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. கடந்த சில தினங்களில் மட்டும் பல வன்முறை சம்பவங்கள் தலித் மக்களின் மீது நிகழ்த்தப் பட்டிருக்கிறது. இதை தடுக்க அல்லது குறைந்தப்பட்சம் இப்படி நடந்துகொண்டு இருக்கிறது என்பதையாவது ஒப்புகொள்வீரா??? மான்புமிகு முதல்வர் ஸ்டாலின், அவர்களே!!
தங்கள் அமைச்சரவையின் கீழ் இயங்கும், ஆதி திராவிட துறைகளுக்கும், தனித்தொகுதி MLA, MP அவர்களுக்கும் இதை விட வேறு முக்கியமான பணிகள் இருப்பதால் நாங்கள் வேண்டுமானால், சமீப காலங்களில் தலித்துகள் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கிறோம். நன்றி!
இவ்வாறு பதிவிட்டுள்ளார்.