வாஷிங்டன்

ஹாலிவுட்டின் பிரபல நடிகர் கிறிஸ்டின் ஆலிவர் விமான விபத்தில் தனது 2 மகள்களுடன் உயிரிழந்துள்ளார்.

சுமார் 51 வயதாகும் பிரபல ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டின் ஆலிவர். ஸ்பீட் ரேசர், இண்டியானா ஜோன்ஸ், ஹண்டர்ஸ் உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.  இவரது மனைவி பெயர் ஜெசிகா. இவர்களுக்கு அகிக் (வயது 10), மடிடா லிப்சர் (வயது 12) என இரு மகள்கள் உள்ளனர்.

கிறிஸ்டின் தனது குடும்பத்துடன் அமெரிக்காவின் கரீபியன் தீவுகளுக்குச் சுற்றுலா சென்றுள்ளார்.  நேற்று மதியம் கிறிஸ்டின் தனது 2 மகள்களுடன் சிறிய ரக தனி விமானம் மூலம் பிக்யுயா தீவில் இருந்து ஜெயிண்ட் லுசியா நோக்கிப் புறப்பட்டார்.

விமனம் புறப்பட சில நிமிடங்களில் விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் நடிகர் கிறிஸ்டின், மகள்கள் அகிக், மடிடா லிப்சர், விமானி ராபர்ட் ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.