ஐதராபாத்: பிரபலமான நிறுவனங்களின் பெயர்களில் தயாரிக்கப்படும் மருந்துகளில் சுண்ணாம்பு தூள், செங்கல் தூள்  கலக்கப்பட்டு இருப்பது  தெரிய வந்துள்ளது.  இந்த போலி மருந்துகளை உத்தரகாண்ட் நிறுவனம் ஐதராபாத் நிறுவனத்துக்கு அனுப்பி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,  பல லட்சம் மதிப்புள்ள  போலி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் செயல்படும் மருந்து தொழிற்சாலைக்கு, உத்தரகாண்டில் உள்ள ஒரு  தொழிற்சாலை  சுண்ணாம்பு தூள், செங்கல் தூளில்  தயாரிக்கப்பட்ட  மருந்து மூலப்பொருட்கள்  அனுப்பி இருந்தது கண்டறியப்பட்டு உள்ளது.  இது போலி  மருந்து தயாரிப்பு தொழிற்சாலை என்பதும் தெரிய வந்துள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரகண்ட் மாநிலம் கோட்வாரில் அமைந்துள்ள நெக்டர் ஹெர்ப்ஸ் அண்ட் டிரக்ஸ் என்ற மருந்து தொழிற்சாலையுடன் நாடு முழுவதும் பல மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தொடர்பில் உள்ளன. இந்த நிறுவனம் வரும் மாநிலங்களுக்கு இடையேயான நெட்வொர்க் மூலம் மருந்து தயாரிப்புக்கான மூலப் பொருட்களை அனுப்பி, மருந்துகளை தயாரித்து வருகிறது. இந்த மருந்துகளில், செங்கல் தூள், சுண்ணாம்பு தூள்கள் கலந்துள்ளது தெரிய வந்ததுள்ளது.

 உத்தரகாண்ட்டில் செயல்பட்டு வரும்  மருந்து தொழிற்சாலையின் சட்ட விரோத செயல் அம்பலமாகி உள்ளது. இந்த நிறுவனம் தெலுங்கானா  உள்பட பல மாநிலங்களில் உள்ள  மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கு , பிரபல நிறுவனங்களின் பெயரிலான மருந்துகளுக்கு மூலப்பொருளாக செல்கல், சுண்ணாம்பு பவுடர் போன்றவற்றை அனுப்பி இருப்பது தெரிய வந்துள்ளது.

இதுதொடர்பான புகாரின்பேரில்,  தெலுங்கானாவின் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகமும் ஹைதராபாத் காவல்துறை ‘ஆபரேஷன் ஜேஏஐ’ என்ற பெயரில், புலனாய்வு நடவடிக்கைளை தொடங்கியது. இதன் தொடர் நடவடிக்கையாக  தெலுங்கானா மாநிலம் மாலக்பேட்டையில் உள்ள மருந்து தயாரிப்பு தொழிற்சாலையில் நடத்தப்பட்ட அதிரடி  சோதனையில், மூட்டை மூட்டையாக சுண்ணாம்பு தூள் மற்றும் செங்கல் துகள்கள், பல பிரபல நிறுவனங்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட  மருந்து தயாரிக்க தேவையான பொருட்களும்  கண்டுபிடிக்கப்பட்டன.

மேலும், 27,200 போலியான ஆண்டிபயாடிக் எம்.பி.ஓ.டி மாத்திரைகள் – 7.43 லட்சம் மதிப்புள்ள 200 மாத்திரைகள் அடங்கிய அட்டைப்பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்து, போலியான Omnicef-O 200 மாத்திரைகள் (Cefixime Tablets IP 200 mg), 60.27 கிலோகிராம் ஆரஞ்சு நிற மாத்திரைகள், 65.27 கிலோகிராம் வெள்ளை நிற மாத்திரைகள், 18 கிலோகிராம் Ogramnic மாத்திரைகள், 30 Om 18 நிமிடம், 18 நிமிடம் 30 Omnic மாத்திரைகள் போலியான 38,350 மாத்திரைகள் (3,835 ஸ்டிரிப்ஸ்) அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மற்றும் 33.45 கிலோகிராம் போலி Omnicef-O 200 அட்டைப்பெட்டிகள் (பேக்கிங் பொருள்)

இதைத்தொடர்ந்து,  இந்த போலி மருந்து தயாரிப்பு கும்பலின் நெட்வொர்க் முறியடிக்கப்பட்டது.  இந்த போலி மருந்துகளை தயாரித்த நிறுவன முதலாளி சச்சின் குமார், விஷத் குமார் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மூசாரம் பாக் அருகே  இந்த போலி விற்பனை செய்த ஒருவர் பிடிபட்டார்.  மேலும்,  போலி மருந்துகளுக்கு ஆர்டர் செய்தவர்கள், அதை வாங்கிய விநியோகஸ்தர்கள், போலி லேபிள்களை ஏற்பாடு செய்த நபர்கள், மருந்துகளை தயாரித்து பேக்கிங் செய்வதில் ஈடுபட்டவர்கள் மற்றும் போலி மருந்துகளை தயாரிக்க அனுமதித்த பலரை கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்து வருகிறது.

ஐதராபாத் நிறுவனத்தில் பறிமுதல் செய்யப்பட்டதில், பிரபலமான மருந்து நிறுவனங்களான,  சிப்லா, கிளாக்ஸோ ஸ்மித்க்லைன் (ஜிஎஸ்கே), அல்கெம் மற்றும் அரிஸ்டோ போன்ற புகழ்பெற்ற நிறுவனங்களின் லேபிள்கள் அந்த மருந்துகள் அடைக்கப்பட்டிருந்த பெட்டிகளில் மேல் பொறிக்கப்பட்டிருந்தது. இதில் இருந்த  மருந்துகளை ஆய்வு செய்ததில், அவற்றில், சுண்ணாம்பு தூள்கள் இருந்தது தெரிய வந்துள்ளது. 

விசாரணையில், உத்தரகாண்ட்  நிறுவனம்,  Augmentin – 625, Clavum – 625, Omnicef-O 200, Montair – LC ஆகியவற்றை போலியாக தயாரித்து பல்வேறு மாநிலங்களுக்கு கூரியர் மூலம் அனுப்பியது விசாரணையில் ஒப்புக்கொள்ளப்பட்டு உள்ளதாக தெலுங்கானா மாநில காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர். மேலும், ஐதராபாத்தில் உள்ள  தொழிற்சாலையில் இருந்து,  சுண்ணாம்பு தூள், செங்கல் தூள் கைப்பற்றப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும்  உத்தரகாண்ட் நிறுவனம், பல மாநிலங்களுக்கு இதுபோன்ற போலி மருந்துகளை அனுப்பி இருப்பதும் தெரிய வந்துள்ளது.

இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.